ஏனைய உலகத்திரைப்பட விழாகளுக்கு நமது திரைப்படங்களை கொண்டு செல்வதற்கு இது ஒரு பெரிய தளமாக அமையப்போகிறது.!
தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் திரைப்படங்களோடு, தமிழ்நாட்டுக்கு அப்பால் உலகம் முழுவதும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களை நார்வே நாட்டில் அங்கீகரித்து, தமிழ் மொழியை, கலை கலாச்சாரத்தை, பண்பாட்டை அடையாளப்படுத்தும் நல்ல திரைப்படங்களை தேர்வுசெய்து, இங்கு மதிப்பளித்து வருகிறோம்.
உலகம் முழுவதும் வாழும் தமிழருக்கான, தனித்துவமான ஒரு விழாவாக, “தமிழர் விருது” வழங்கும் நிகழ்வு நோர்வே நாட்டில் மட்டுமே நிகழ்கிறது. அந்த வகையில் இந்த வருடம் நடைபெற இருக்கும் 5வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு நிறைவுத் தேர்வாக 18 முழுநீளத்திரைப்படம் திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து தெரிவாகும் படங்கள்
01.சென்னையில் ஒரு நாள்
02.ஹரிதாஸ்
03.விஸ்வரூபம்
04.சூது கவ்வும் (காட்சி)
05.ராஜா ராணி
06.வருத்தபடாத வாலிபர் சங்கம் (காட்சி)
07.ஆதலால் காதல் செய்வீர்
08.ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (காட்சி)
09.தங்கமீன்கள் (காட்சி)
10.தலைமுறைகள் (காட்சி)
11. பரதேசி
12.விடியும் முன் (காட்சி)
தமிழ்நாட்டுக்கு அப்பால், உலகம் முழுவதும் இருந்து தெரிவாகும் படங்கள்:
1. ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் – கனடா
2. Paranoid Patient – டென்மார்க்
3. மாறுதடம் – சுவிஸ்
நோர்வே தமிழ் திரைப்பட விழா விசேட காட்சித் தெரிவு 2014:
1. மூடர் கூடம் – இந்தியா
2. வெண்மேகம் – இந்தியா
3. மைந்தன் – மலேசியா
4. இதுவும் கடந்து போகும் – இந்தியா
இங்கே தெரிவு செய்யப்படிருக்கும் படங்களைத் தயாரித்த (நீங்கள்) தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்களுடைய படங்களை(DCP format -2K il) இல் எமக்கு அனுப்பி வைக்குமாறு இந்த பத்திரிக்கை செய்திமூலம் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தி திரைப்படங்களே இந்திய சினிமாவின் திரைப்படங்கள் என்று கருதப்படுகிற சூழ்நிலை, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிற அணைத்து நாடுகளில் மேலோங்கி நிற்கிறது. இதை உணர்ந்து எமது கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளுடன் முழுமனதோடு இங்கு வந்து இத் திரைப்படவிழாவை சிறப்படைய செய்யவேண்டும் என்று தாழ்மையோடும், உரிமையோடும் கேட்டுகொள்கிறோம்.
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் குறும்படங்கள், ஆவணப்படங்கள், காணொளிகள்(Music Video) அனிமேஷன் திரைப்படங்களுக்கான போட்டிகளும் நடைபெறுகின்றது. ஆகவே உலகமெங்கும் வாழும் வளர்ந்து வருகின்ற கலைஞர்கள் உங்கள் படைப்புகளையும் 17 மார்ச் (பங்குனி) முன்பாக அனுப்பிவைக்குமாறு இத்தருணத்தில் கேட்டுகொள்கின்றோம்.
நோர்வே தமிழ் திரைப்பட விழா தொடர்பான கேள்விகள், தொடர்புகளுக்கு நேரடியாக எம்மைத் தொடர்புகொள்ளவும்.
மின்னஞ்சல் : tamilfilmfestival@gmail.com
இணையத்தளம்: www.ntff.no
தொலைபேசி இலக்கம் : 0047 913 70 728.