13வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருது 2022

13வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருது 2022 01.தை திருவள்ளுவர் ஆண்டு 2053 14.ஜனவரி 2022 ———————————————-
ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
உலகத் தமிழர் திருநாளில் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றோம்
“தமிழ்நாட்டு” திரைப்படங்களுக்கான – தமிழர் விருதுகளை இந்த தைப்பொங்கல் நாளில் அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம் !
உலகம் முழுவதும் கொரோனா நுண்கிருமி தொற்று  நான்காவது அலை ஆரம்பித்திருக்கும் நிலையில், நோர்வே அரசு, மற்றும்  சுகாதார அமைச்சின்  விதிமுறைகளுக்கு ஏற்ப திரைப்பட விழா நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் வெளியாகும் குறும்படங்கள் – காணொளிகள்- முழுநீளத் திரைப்படங்களுக்கான  தமிழர் விருதுகள்  எதிரவரும் 15.02.2022 அன்று அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2021) வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட படங்கள்,  தமிழர் விருதுகளை பெறவுள்ள  தமிழக கலைஞர்களின் விவரங்கள் அறியத்தருகின்றோம் .
2021 இல் பெரும்பாலான திரைப்படங்கள் திரையரங்கிலும்,  ஓ.டி.டி தளங்களில் வெளியாகி இருந்தது. இது எமது தெரிவுகளுக்கு கடினமாக இருந்தது. எமது பார்வைக்கு கிடைப்பெறாத சில நல்ல திரைப்படங்கள், எங்கள் தெரிவில் இடம்பெறாமல் போயிருப்பதற்கான வாய்ப்பும் உண்டு.
ஆகவே இனி வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள திரைப்படத்  தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் உங்கள் திரைப்படங்களை முன்கூட்டியே அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

13 ஆண்டுகளாக உங்கள் அனைவருடைய  பேராதரவோடு தான்  இத்  திரைப்பட விழாவை திறம்பட நடத்த முடிந்தது. ஆகவே உங்கள் பேராதரவையும், பேரன்பையும்  தொடர்ந்து  வழங்குவீர்கள்  என்று நம்புகின்றோம்.

என்றும் அன்புடன்

வசீகரன் சிவலிங்கம்
இயக்குநர்
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா
14.01.2022