வாமனன் இயக்குனரோடு கை கோர்க்கும் ஜீவா

டாக்டர் வி.ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் வாமன புகழ் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹாரீஸ்  ஜெயராஜ் இசையமைக்கிறார்.
மருத்துவதுறையில் சிறந்து விளங்கும் டாக்டர் வி.ராமதாஸ், சிறந்த‌ தொழில்முணைவோராக பல்வேறு துறைகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார்.2006 ல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பபடும் மதிப்புமிகு பிரவசி பாரதிய விருதிய இவர் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுளார். திரைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர், தரமான படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
ஜி.கே.எம்.தமிழ்குமரனோடு இணைந்து பெரும் பொருட்செலவில் புதிய படத்தை அவர்தயாரிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஜீவா நாயகனாகநடிக்கிறார்.வாமனன் படத்தை இயக்கிய அகமது இயக்குகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்த படம் செஷல்ஸ்,மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளது.ஜீவா கவுதம்மேனன் படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தபடம் துவங்குகிறது.
தந்தை  மகன் உறவு, நட்பு, இளமை, காதல் ஆகிய அம்சங்களை கொண்ட திரைப்படமாக இது உருவாகும் என்கிறார் இயக்குனர் அகமது. படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக நாயகன் ஜீவா கூறுகிறார்