நோர்வே தமிழ் திரைப்பட விழா 2011: பத்திரிகையாளர் சந்திப்பு

அன்புக்குரிய நோர்வே வாழ் தமிழ் மக்களுக்கு,

நல்ல  தரமான கதைகளை கொண்ட தமிழ்ப்படங்களை  உலகத் திரையரங்குகளில் திரையிடுவதற்கான  முன் முயற்ச்சியாகவும், தமிழ்ப்படங்களை வேற்று நாட்டு இனத்தவர்கள் பார்த்து மகிழவும்,  நோர்வேயில் இரண்டாவது முறையாக தமிழ் திரைப்பட விழா அரங்கேறுகிறது. இது தமிழ் திரைப்படங்களுக்கென உருவாக்கப்பட்ட  தனியானதொரு திரைப்பட விழா.
உலகத்தில் எத்தனை திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், புலம் பெயர் தமிழர்களால் நடாத்தப்படும் தனிப் பெரும் விழாவாக வளர்ந்துள்ளது. அதே வேளை,  இத் திரைப்பட விழாவை நோர்வேயில் தொடர்ந்து நடாத்துவதில், நோர்வே வாழ் தமிழர்களாகிய நாம் பெருமை அடைகிறோம்.
இந்த வருடம் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு  சிறப்பிக்க, தமிழகத்தில் இருந்து பல திரைப்பட இயக்குனர்கள் நோர்வேக்கு வருகைதர இருக்கிறார்கள்: சேரன்(ஆட்டோகிராப்), மிஷ்கின் (நந்தலாலா), விஜய் (மதராசிப்பட்டணம்), பிரப சாலமன் (மைனா), வசந்தபாலன் (அங்காடித்தெரு) வெற்றிமாறன் (ஆடுகளம்), சந்தோஸ் (எல்லாளன்)  ஆகியோருடன், இன்னும் பல இயக்குனர்களும், திரையுலக நட்சத்திரங்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள்.
இத்திரைப்பட விழாவை அபிராமி cash & Carry மற்றும் அட்சயா media entertainment உடன் இணைந்து நாடத்துவதில் வசீகரன் இசைக்கனவுகள் நிறுவனம் மகிழ்ச்சியடைகின்றது.
நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் 12 அதிகமான உறுப்பினர்கள் பணியாற்றுகின்றனர்.
தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் போது இவ்வருடம் உலகமெங்குமிருந்தும் பல குறும்படங்கள் குறும்படப்போட்டியில் கலந்துகொள்கின்றன. தவிர சினிமா, ஒளிப்பதிவுக்கலை போன்றவற்றில் பயிட்சிப்பட்டறைகளும், கலந்துரையாடல்களும் நடாத்தப்படவுள்ளன. உள்ளூர்க் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது.
இந்த விழாவின் நிறைவு நாளான அன்று நீங்கள் தெரிவு செய்கின்ற திரைப்படத்துக்கு மக்கள் விருதும்,
நடுவர் குழவினால் தெரிவு செய்யப்படும் படங்களுக்கு 22 வகையான  விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
இயக்குனர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்வுகள்:
சிறந்த குறுந்திரைப்படஙகள் பார்த்தல் (Visning)
குறுந்திரைப்பட மொழி தொடர்பான உரையாடல்
தொழில்நுட்பம் (கமரா, கோணங்கள், வெளிச்சம்)
Skript தயாரித்தல் (திரைக்கதை உருவாக்கம்)
ஏதாவது ஒரு கதை எடுத்தல் (field work) (ஒரு தலைப்பை வைத்து எடுத்தல்)
கலந்துரையாடல்: முழுநீள திரைப்படம், குறும்படம் என்ன வித்தியாசம்
http://www.youtube.com/watch?v=YC_YN4sFedw

http://www.youtube.com/watch?v=ySpA2Bielhs&feature=related

இந்த விழா பற்றிய விபரங்களை இணையத்திலும், முகப்புத்தகத்திலம் நீங்கள் காணலாம்.

என்றும் அன்புடன்
வசீகரன் சிவலிங்கம்
இயக்குனர்
நோர்வே தமிழ் திரைப்பட விழா 2011