நோர்வே தமிழ் திரைப்பட விழா 2011 – தமிழர் விருது- திரையிடல் நிகழ்வும்

நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2011

சிறப்பு  விருந்தினர்களாக தமிழகத்தில் இருந்து பின்வரும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நடிகர்களும், இசையமைப்பாளர்களும், கலந்து  சிறப்பிக்கின்றார்கள். பிரபல இயக்குனர், நடிகர் சேரன், பிரபல இசையமைப்பாளரும் A. R. Rahman இன் உறவினரும், இன்றைய இளைஞர்களின் இசையமைப்பாளருமான, G. V. பிரகாஸ் குமார் , பொல்லாதவன், ஆடுகளம் புகழ் இயக்குனர் வெற்றிமாறன், ஆடுகளத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து பலரினதும் பாராட்டையும் பெற்றிருக்கம் நமது  ஒஸ்லோ கலைஞர் வ.ஐ.ச  ஜெயபாலன் மதராசப்பட்டினம் புகழ் இயக்குனர்  எ.எல்.விஜய், ஒளிப்பதிவாளரும்,  எல்லாளன் பட இயக்குனருமாகிய சந்தோஸ்

மொழி, ”அபியும் நானும்”  பயணம் புகழ் இயக்குனர் ராதா மோகன், மைனா புகழ் இயக்குனர் பிரபு சாலமன்,கூடல் நகர், தென்மேற்குப் பருவக்காற்று புகழ் இயக்குனர் சீனு ராமசாமி
களவாணி திரைப்படத்தின் தயாரிப்பாளர் நசிர், தா திரைப்படத்தின் கதை நாயகன் ஹரிஷ், தா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

ஆரம்ப நாள் நிகழ்வுகள் 20.04.2011 Onsdag kl 17.00(Lørenskog Kino)

 • கலைஞர்கள் வரவேற்பு நிகழ்வு
 • பாட்டோடு நாங்கள்
 • இயக்குனர்கள் பங்குகொள்ளும் “நேர்முக நேரம்”
 • குறும்படங்கள் திரையிடல் (3 குறும்படங்கள்)
 • எம்மவரின் அட்டகாச நடனங்கள்

நிறைவு நாள் நிகழ்வுகள் 25.04.2011 Mandag kl 17.00 (Lørenskog Kino)

 • பாட்‌டோடு நாங்கள்
 • எம்மவர்  கலக்கல் நடனங்கள்
 • இயக்குனர்களின் விவாத மேடை
 • ”தமிழர் விருது” வழங்கும்  நிகழ்வு
 • “குறும்பட விருது” வழங்கும்  நிகழ்வு

திரைப்படக் கலை, புகைப்படக்கலை சம்பந்தமாக பயிற்சிநெறி வகுப்புக்களும் நடைபெறுகின்றன. இதற்கான கட்டணம் 100 குறோணர்கள் மட்டுமே. 22ம் திகதி வெள்ளிக் கிழமை புகைப்படக்கலை, திரைப்படகலை சம்பந்மான நுணுக்கங்கள், பயிட்சி பட்டறைகள், இயக்குனர் சேரன் மற்றும் ஏனைய இயக்குனர்கள் பங்களிப்போடு, ஒளிப்பதிவாளரும், எல்லாளன் பட இயக்குனருமாகிய சந்தோஸ் ஆகியோராலும் நடாத்தப்படும்.

உங்களின் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது அவசியம்.தொடர்புகளுக்கு: சஞ்சயன் – கைத்தொலைபேசி  400 55 720

மின்னச்சல்: tamilfilmfestival@gmail.com
புகைப்படப் போட்டி:  ஒளிப்பதிவாளரும், எல்லாளன் பட இயக்குனருமாகிய சந்தோஸ் அவர்களினால் தெரிவு செய்யப்படும் முன்று புகைப்படங்களுக்கு நிறைவு நாள் நிகழ்ச்சியின் போது சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.
உங்கள் படங்கள் பின்வரும் தலைப்புக்களுக்கு உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.

 • நோர்வேயின் இயற்கையழகு
 • மனித உறவுகள்
 • உருவப்படம் – Portrait  (குழந்தைகள், மனிதர்கள், மிருகங்கள்)

உங்களின் படங்களை உங்களின் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கங்களுடன், 5 mb க்கு உட்பட்ட அளவில் பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்: tamilfilmfestival@gmail.com. ஒருவர் ஒரு தலைப்பிற்கு ஒரு படம் மட்டுமே அனுப்பலாம். மேலதிகத் தொடர்புகளுக்கு: சஞ்சயன் – கைத்தொலைபேசி +47 400 55 720
திரைப்பட விழாவுக்கான நுளைவுச்சீட்டு பற்றிய விபரங்கள்:

 • ஆரம்பநாள் நிகழ்வுகள்  100 குறோணர்கள்
 • ஒரு திரைப்படம் பார்ப்பதற்கு 90 குறோணர்கள் ( குழந்தைகளுக்கு 70 குறோணர்கள்)
 • ஒரு குடும்பதிற்கான  நுளைவுச் சீட்டு 200 குறோணர்கள்: (பெற்றோர், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவர்)
 • திரைப்பட விழாவிற்கான சிறப்பு நுளைவுச் சீட்டு 500 குறோணர்கள்( 10 படங்கள் மட்டும் பார்க்கலாம்)
 • 22.ம் திகதி உலகெங்கும் திரையிடப்படும்  ”கோ” திரைப்படம் 130.- குறோணர்கள் (குழந்தைகளுக்கு 100 குறோணர்கள்)
 • நிறைவுநாள் நிகழ்வுகள் 120 குறோணர்கள்

நுளைவுச் சீட்டுக்களை அபிராமி cash & carry, விஜய் Shop ஆகிய இடங்களிலும் அல்லது பின்வரும் அலைபேசி இலக்கங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்
செழியன் –  கைத்தொலைபேசி  934 020 91
சஞ்சயன் –  கைத்தொலைபேசி  400 557 20