நோர்வே தமிழ் திரைப்பட விழா 2012 – இன்னும் மூன்று நாட்கள் !

இந்த விழாவில் நேரடியாகப் பங்கேற்க மயக்கம் என்ன, ஒஸ்தி புகழ் நாயகி ரிச்சா கங்கோபாத்யாய், புரட்சித் தளபதி விஷால், இயக்குநர்கள் சற்குணம், கவுரவ், ஆவணப்பட இயக்குநர் சுபாஷ் கலியன் , பாலை திரைப்பட  நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, புன்னகைப்பூ கீதா, கேசவன் உள்பட பல திரையுலகக் கலைஞர்கள் நோர்வே வருகின்றனர் .
24 ஆம் தேதி முதல் 28 ம் தேதி வரை  பத்து தமிழ் திரைப்படங்கள் Ringen திரையரங்கில் பார்வையாளர்களுக்காக திரையிடப்படுகின்றன. இதற்கான நுழைவுச் சீட்டுகளை www.filmweb.no   இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
Stovner இல் உள்ள Nedre Fossum Gård – Kultur Salen இல் இருபது குறும்படங்கள் 25, 26 ஆம் தேதிகளில் இலவசமாக திரையிடப்படுகின்றன, நுழைவுச் சீட்டு இலவசம்!!
நிறைவு நாளான 29 தேதி தமிழர்  விருதுகள்  வழங்கும்  விழா நடக்கிறது. அன்றைக்கு பார்வையாளர் செவிகளுக்கு இன்னிசை விருந்து வழங்க பிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா, விஜிதா சுரேஷ், பிரபா பாலகிருஷ்ணன் சூப்பர் சிங்கர் புகழ் அண் சந்தியா(நோர்வே) , பிரவீனா(நோர்வே), மாளவி சிவகணேஷன்(நோர்வே) ஆகியோருடன் ‘Yarl stars’ இசைக் குழுவினர் இணைந்து வழங்கும் “நள்ளிரவுச் சூரியன்” – இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவடையச் செய்யும் முயற்சிகளில் ஒன்று இந்த நோர்வே திரைப்பட விழா.  உங்கள் பேராதரவை வேண்டி அனைவரையும் அழைக்கின்றனர், நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவினர்!
தூங்கா நகரம் – சிறப்புத் திரையிடலுக்கு தேர்வு
கவுரவ் இயக்கத்தில் விமல் – அஞ்சலி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற தூங்கா நகரம் திரைப்படம் இந்த ஆண்டு நோர்வே தமிழ் திரைப்பட விழாவின் சிறப்புத் திரையிடலுக்கு தேர்வாகி உள்ளது.
சுபாஷ் கலியன் இயக்கத்தில் “பாலம் கல்யாணசுந்தரம்” அய்யா அவர்களின் ஆவணப்படமும் இந்த விழாவில் சிறப்பு திரையிடலுக்கு தெரிவாகி உள்ளது. நார்வே தமிழ் திரைப்பட விழாவின் பிரதான போட்டிக்கான 15 முழு நீள தமிழ் திரைப்படங்களை, மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையே சமீபத்தில்தான் அறிவித்திருந்தோம்.
அடுத்து குறும்படங்களுக்கான தேர்வு. போட்டி அறிவித்ததிலிருந்து குவிந்துவிட்டன குறும்படங்கள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 50-க்கும் அதிகமாக படங்கள் இந்தப் போட்டிக்குக் குவிந்தன. அனுப்ப வேண்டிய இறுதித் தேதியான பெப்ரவரி 20-ம் தேதி மட்டுமே பல படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்பி வைத்து நமக்கு தொலைபேசியிலும் தெரிவித்திருந்தனர்.
நார்வே தமிழ் திரைப்பட விழாவின் நடுவர் குழு பார்த்து தேர்வு செய்ததன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான நார்வே திரைப்பட விழாவுக்கு 20  குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை:
தமிழ் சினிமாவுக்கென்றே உலக அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. இந்த விழாவின் முடிவில் சிறந்த திரைப்படத்துக்கு தமிழர் விருதும், சிறந்த நடிகர் – நடிகை, தொழில் நுட்பக் கலைஞர்கள், சிறந்த இயக்குநருக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்வு சிறந்த தமிழ் குறும்படங்களை சர்வதேச பார்வையாளர்களுக்கு திரையிடுவது.
அந்த வகையில் இந்த ஆண்டு விழா பற்றிய அறிவிப்பு வெளியானதுமே ஏராளமான படைப்பாளிகள் தங்கள் படங்களை விழா குழுவினருக்கு அனுப்பிய வண்ணம் இருந்தனர். இறுதித் தேதிக்குப் பிறகும்கூட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படங்களை அனுப்பலாமா… சேர்க்க முடியுமா என கேட்டவண்ணம் இருந்தது, இந்த விழாவின் பெருமையை பறைசாற்றுவதாக இருந்தது.
ஆழந்த பரிசீலனைக்குப் பிறகு நார்வே தமிழ் திரைப்பட விழா நடுவர் குழு 20 குறும்படங்களை தேர்வு செய்ததது.
அவை:
தி மெசையா (ஷரத் ஜோதி)
கல் (மஞ்சுநாதன் எஸ்)
ரோட்சைட் அம்பானிஸ் (கமல் சேது)
துருவ நட்சத்திரம் (அரவிந்த் சுப்ரமணியன்)
நானும் ஒரு பெண் (வி ராமநாதன்)
அண்ட் ஷி ப்ளைஸ் (முகில் சந்திரன்)
ஸ்கூல் சப்பாத்து (மகேஸ்வரன் பாலகிருஷ்ணன்)
நகல் (பொன் தயா)
பூச்சாண்டி (சைமன் ஜார்ஜ்)
காட்டு மூங்கில் (விகடகவி)
பராசக்தி (ஆர்த்தி மங்களா)
துவந்த யுத்தம் (எஸ் அசோக்குமார்)
கள்ளத்தோணி (அருள் எழிலன்)
மூன்றாம் தமிழ் (ரா பச்சமுத்து)
ஆக்ஷன் (புஷ்கின் ராஜா)
அவன் (ரூபஸ் ஜெ)
விடுமுறை வேண்டி (சதீஷ் குமார்)
உயிரோசை (பிரபு துரைராஜ்)
யார் (கணேஷ் பிரபு)
பாடசாலை (பி பாஸ்கர்)
இவர்களைத் தவிர, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த 5 நாள் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.