'தமிழ் இனி' மணி ராம் சிறந்த குறும்பட இயக்குநர்... சிறந்த படம் இடுக்கண்!

By Raghavi 12.03.2013 08:58

நார்வே தமிழ் திரைப்பட விழா 2013-ன் முதல் கட்டமாக, குறும்படங்கள் திரையிடல் மற்றும் தேர்வு மார்ச் 10-ம் தேதி நடந்தது. இதில் ஏராளமான தமிழ் குறும்படங்கள், ஆவணப் படங்கள், இசை வீடியோக்கள் இடம்பெற்றன.

அனைத்துப் படங்களும் திரையிடப்பட்டு, அவற்றில் தேர்வு பெற்ற சிறந்த படைப்புகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்:

சிறந்த குறும்படம் - இடுக்கண். சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் விஸ்வநாதன் இயக்கத்தில் உருவான 13 நிமிடப் படம் இது.

சிறந்த குறும்பட இயக்குநர் - மணி ராம்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தமிழர் மணிராம் இயக்கிய இந்தப் படம், வெளிநாடுகளில் செட்டிலான தமிழர்கள் மத்தியில் அருகி வரும் தமிழின் எதிர்காலம் குறித்துப் பேசுகிறது. நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியில் தேர்வு பெற்ற படம் இது.

சிறந்த கதை - மவுன மொழி. சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திர ஹாஸ்மி இயக்கத்தில் உருவான படம் இது.

சிறந்த நடிகர் - விஸ்வா. கசப்பும் இனிப்பும் படத்துக்காக சென்னையைச் சேர்ந்த விஸ்வா சிறந்த நடிகராக தேர்வு பெற்றுள்ளார்.

சிறந்த ஒளிப்பதிவு / எடிட்டிங் - டுடே 27. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்த பாரிசை சேர்ந்த தேசுபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த ஆவணப்படம் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆல்பிரடோ டி பிராங்கஸா இயக்கிய பாக்ஸிங் பாபிலோன் தேர்வு பெற்றுள்ளது.

சிறந்த இசை வீடியோவாக நார்வேயைச் சேர்ந்த பிரசன்னா பர்குணம் இயக்கிய உயிரின் ஏக்கம் தேர்வு 

இந்த ஆண்டு நடுவர்களின் சிறப்பு விருதினை கிஷோர் இயக்கிய பஞ்சாயத்து பொட்டி எனும் குறும்படம் பெற்றுள்ளது.

தேர்வு பெற்ற படங்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு நார்வே தமிழ் திரைப்பட விழாவின் நிறைவு நாளில் (ஏப்ரல் 27) தமிழர் விருதுகள் வழங்கப்படும்.