நோர்வே தமிழ் திரைப்பட விழாவும் இன்னிசை விருந்தும் 2012

By Raghavi 08.04.2012 14:01

மூன்றாவது முறையாக ஏப்ரல் 25 முதல் 29 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருது 2012 நள்ளிரவுச் சூரியன் - இன்னிசை விருந்து.

 

உலகின் பல பாகங்களில் இருந்து கலைஞர்கள் தமிழ் திரை உலகின் புரட்சித் தளபதி  நடிகர்  விஷால், மயக்கம் என்ன புகழ் ரிச்சா கங்கோபதியயா, பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, வாகை சூட வா இயக்குனர் சற்குணம், தூங்கா நகரம் இயக்குனர் கௌரவ், பாலை இயக்குனர் செந்தமிழன், வெங்காயம் திரைப்படஇயக்குனர் ராஜ்குமார்.

 

பதினைந்து திரைப்படங்கள், 25 பல்வேறு பிரிவுகளில்  "தமிழர் விருதுக்காக" போட்டியிடுகின்றன. பத்து திரைப்படங்கள் Ringen திரையரங்கில் திரையிடப்படுகிறது. நுழைவுச் சீட்டுகளை இணையத்தில் வாங்க பார்க்கwww.filmweb.no søk etter tamil film

 

மேலும் 25ம், 26ம் திகதிகளில் மாலை 17:00 மணிக்கு உங்களுக்காக Stovner இல் உள்ள Nedre Fossum Gård - kultur salen இல் முற்றிலும் இலவசமாக இருபது குறும்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.

 

உங்கள் செவிகளுக்கு இன்னிசை விருந்து வழங்கபிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி,ஸ்ரீமதுமிதா, விஜிதா சுரேஷ், பிரபா பாலகிருஷ்ணன் உடன் Yarl stars இணைந்து வழங்கும் நள்ளிரவுச் சூரியன் - இன்னிசை விருந்து.

 

சர்வதேச திரைப்பட விழாவாக உருவெடுத்திருக்கும் இந்த நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் தமிழ் படைப்பாளிகள் தயாரிப்பாளர்கள், மற்றும் நமது இயக்குனர்களும் கலந்து கொள்கிறார்கள்.

 

Lørenskog hus பெரிய அரங்கத்தில் நிறைவுநாள் விருது வழங்கும் நிகழ்வுகளின் போது ஈழத்து முத்த கலைஞர் ஏ. ரகுநாதன் (பிரான்ஸ்) வாழ்நாள் சாதனையாளர்  விருதினையும். நடிகர் சத்யராஜ் கலைச்சிகரம் விருதினையும் பெறுகிறார்கள்.

நுழைவுச் சீட்டுகளை இணையத்தில் வாங்க..  Kjøp billetter her

தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்லும் பெரும் முயற்சி இது!

உங்கள் பேராதரவை வேண்டிஅனைவரையும் அழைகின்றனர் நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவினர்.

 

 

தொடர்புகட்கு : tamilfilmfestival@gmail.com